தேசிய பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வு அவசியம்

நோர்வே நாட்டின் பிரதமருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

norway-Samb

இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் எடுத்துரைத்தார்.

மீள்குடியேற்றம், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இன்னும் துரிதமாக இடம்பெற வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர், இச்செயற்பாடுகளில் சர்வதேசத்தின் பங்களிப்பும் அவசியம் எனவும் எடுத்துரைத்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பேசுகையில், தேசிய பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வொன்றினை பெறுவது மிகவும் அத்தியாவசியமானது என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் காணாமற் போனோருக்கான அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம் தொடர்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன், புரிந்துணர்வை நோக்கிய பயணத்தில் இது மிகவும் முக்கியமான ஒரு படிக்கல் எனவும் இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் உண்மை நிலைநாட்டப்படும் என்பதனையும் வலியுறுத்தினார்.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளில் நோர்வேயின் ஆக்கபூர்வமான பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என நோர்வேயின் பிரதமர் தெரிவித்தார்.

Related Posts