தமிழ் கலைத்துறைக்கு மாபெரும் சேவையாற்றிய படைப்பாளி இராமதாஸ்

நம் நாட்டின் தமிழ் கலைத்துறைக்கு மாபெரும் சேவையாற்றிய படைப்பாளியாகி எஸ். ராம்தாஸ் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வானொலி நாடகத்துறையூடாக ஆரம்பத்தில் தன்னுடைய கலைப்பணியை ஆரம்பித்த இவர், பின்பு மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களின் ஊடாகவும் தன்னுடைய கலைப்பணியினை இடைவிடாது ஆற்றி வந்திருக்கின்றார். இலங்கையில் உருவாகிய தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமல்லாது சிங்கள திரைப்படங்களிலும் இவர் நடித்திருப்பதனை நான் இச் சந்தர்ப்பத்தில் நினைவுகூர விரும்புகின்றேன்.

எல்லா கலைஞர்களுக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடைப்பதில்லை. ஆனால் கலையை முறையாகவும் ஆளுமையுடனும் கையாளும் கலைஞர்களே மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவர். அவ்வாறான கலைஞர்களே காலங்கடந்தும் மக்களின் மனங்களில் நீங்காமல் இடம் பிடித்திருப்பர். அப்படியான மக்கள் மனங்களில் காலம்காலமாக நிலைத்து நிற்கும் ஒரு கலைஞராகவே எஸ். ராம்தாஸ் அவர்களை நான் இனங்காண்கின்றேன்.

நம் நாட்டின் கலைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய இந்த மாபெரும் கலைஞனை நான் பாராட்டி நிற்பதோடு இவரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், கலைத்துறை ஆர்வலர்கள் ஆகியோருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Posts