வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவதற்கான காணிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பார்வையிட்டுள்ளனர்.
இதற்கமைய தாண்டிக்குளம் மற்றும் ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் பொருளாதார மத்திய நிலையத்திற்கான காணி தெரிவு தொடர்பாக திங்கட்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிற்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.