யாழ் மாவட்டத்தில் காணப்படும் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் நோக்கில் யாழ் மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் அண்மையில் (01) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சின் கீழ் உள்ள மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினல் இந்த மத்திய நிலையம் யாழ் மாவட்டத்தில் முதற்தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த மத்திய நிலையத்தை திறந்து வைத்தார்.
தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் இராஜாங்க செயலாளர் சுனில் அபேவர்தன, மனிதவலு வேலைவாய்ப்புத்திணைக்களத்தின் பணிப்பாளர தர்மசேன மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
