வடக்கு மாகாணம் மற்றும் சிலாபம் – கொழும்பு தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
வடமாகாண ரீதியில் இன்று முதல் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ள வடக்கு இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இணைந்த நேர அட்டவணை அமுலாக்கத்தில் காணப்படும் இழுபறி நிலையே இந்த பணிப்புறக்கணிப்புக்கு காரணம் என வடக்கு இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவர் சிவகரன் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சிலாபம் – கொழும்பு தனியார் பேரூந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
சாரதி ஒருவர் தாக்கப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தே இந்த புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.