இராசையா குவேந்திரன் எனும் தனிமனிதனின் முயற்சியாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள ராஜா பிளாசா மாதிரிக்கிராமம் பயனாளிகளிற்கு எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை கையளிக்கப்படவுள்ளது.
கோண்டாவில் கிழக்கை சேர்ந்த அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையம், குமரன் விளையாட்டுக்கழகம் என்பவை இணைந்து உயர்த்தும் கைகள் வேலைத்திட்டத்தின் கீழ் நிலாவரை பகுதியினில் இவ்வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
யுத்தத்தினில் குடும்பங்களை இழந்த மற்றும் தெல்லிப்பழை துர்க்காதுரந்தரி ஆச்சிரமத்தினில் தங்கியிருந்த இளம்பெண்களிற்கு அவர்கள் தமது வாழ்வை தொடர ஏதுவாக இவ்வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.
இவ்வீடுகள் காணியுடன் தலா 3 மில்லியன் மதிப்பீடு கொண்டவையாகும்.
நிகழ்வினில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் 26ம் திகதி கொடையாளரை கௌரவிக்கும் நிகழ்வை ஊர் மக்கள் முன்னெடுக்கின்றனர்.