அமெரிக்க காங்கிரஸில் உள்ள இலங்கை ஆர்வலர்களே தம்மை அழைத்துள்ளதாகவும் தாம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்கா செல்லவில்லை என்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக தாம் அமெரிக்காவுக்கு சென்றதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றும் அமெரிக்க தமிழர் பேரவை என்பன குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.
எனினும் இதில் உண்மையில்லை என்று குறிப்பிட்டுள்ள சுமந்திரன், வோசிங்டனில் நடைபெறவுள்ள நிகழ்வில், தாம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத விடயங்கள் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் காங்கிரஸ் குழுவுக்கு தெளிவு படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அமெரிக்க தூதுவர் பிரசாத் காரியவசத்தை தமது உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே காங்கிரஸ் குழு அழைத்துள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.