கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலில் மோதி, இணுவில் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த தெரிவித்தார்.
சனிக்கிழமை (11) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எச்.சிறிலிங்கம் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.