யாழ் பகுதியில் வசித்து வரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளின் சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தை முன்னேற்றும் வகையில் 7 ஆவது இலங்கை இராணுவ பெண்கள் படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது கட்ட சமூக பொருளாதார நலன் ஒருங்கிணைப்பு செயலமர்வு அண்மையில் (4) கோப்பாய் கிருஸ்த்துவ கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது இராணுவ பெண்கள் படையினர் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளுக்கிடையில் பல்வேறு விடயங்டகளில் சிநேக பூர்வ தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் அவர்களிடையே பரஸ்பர புரிதல் மற்றும் சக வாழ்வை முன்னேற்றும் வகையில் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் இறுதியில் இராணுவ பெண் படை வீரர்களினால் கலந்து கொண்ட ஒவ்வொருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதியொன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி, புனர்வாழ்வு பெருனருக்கான சமூக பொருளாதார நலன்புரி ஒருங்கிணைப்பு அதிகாரி, பெண் ஆலோசனை அதிகாரிகள் மற்றும் இராணுவ பெண் படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.