யாழ்.பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை அமைச்சர் விஜயகலாவுக்கும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்திசசிதரனுக்கும் இடையில் கருத்து மோதல் ஒன்று இடம் பெற்றுள்ளது.
சிறுவர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் உள்ள பெண் பிரதேசசெயலாளர் ஒருவரை மாற்றியமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்குநான் சமுகமளிக்க விரும்பவில்லை.
ஏனெனில் பிரதேசமக்கள் பாதிக்கப்பட்டதால் பிரதேச செயலரை மாற்றினோம். அவரைபற்றி பல முறைப்பாடுகள் எமக்குகிடைக்கப் பெற்றது. பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் வாக்குகளில் தான் நாம் பாராளுமன்றம் சென்றுள்ளளோம். எனவே அவர்களுக்குரிய திட்டம் என்னவென்றாலும் முன் னுரிமை வழங்கவேண்டும்.பிரதேச செயலகங்கள் அரச நிறுவனங்களில் தீர்வுகிடைக்காத பட்சத்தில் அரசியல்வாதிகளை தேடிமக்கள் செல்கின்றனர். எனவே கடந்தகால கசப்பான அனுபவங்களை மறந்து மக்களின் அபிவிருத்திக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதன்போது வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கருத்து ஒன்றினை முன்வைத்தார். அரச அலுவலரின் இடம்மாற்றம் பற்றி அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் அந்த அலுவலர் இன்னும் ஒருபிரதேசசெயலகத்தில் கட மையாற்றி வருகிறார். அவருடனான அமைச்சரின் முறைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். அந்த அலுவலர் ஒரு சாராருக்கு பிழையாக தெரிந்தாலும் அவர் பலருக்கு சிறந்த அதிகாரியாக காணப்படுகிறார்.
இப்போது இருப்பவரில் குற்றம் காணப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டால் இவ்வாறு தொடர்சியாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து கொண்டிருக்கும். பெண்ணாக துணிச்சலாக கடமையாற்றிய ஒருபிரதேச செயலரை இவ்வாறு சொல்வது ஏற்றுக் கொள்ளமுடியாது என தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவ ரும் பெண்தான். நானும் பெண் தான. எனது அலுவலகத்துக்கு வந்த பல முறைப்பாடுகளுக்கு இணங்கத் தான் இடமாற்றம் செய்யப்பட்டார். அதை விடுத்து தனிப்பட்ட பகை எதையும் குறித்து வாதாடவர வில்லை எனத் தெரிவித்தார்.
இருவரின் கருத்தையடுத்து அதை நிறைவுக்குகொண்டு வருவதாக தெரிவித்த முதலமைச்சர் குறித்த விவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை அடுத்து ஒருங் கிணைப்பு குழு கூட்டம் தொடர்ச்சியாக சுமுகமானமுறையில் இடம்பெற்றது.