வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் அனைத்தும் பொதுமக்களிடம் வழங்கப்படும்!

நாட்டின் வடக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைக்கவேண்டிய தேவையெழுந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ranil-met-army

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றிய மற்றும் கடமையாற்றிக்கொண்டிருக்கும் நூற்றிற்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகளை கடந்த வாரம் அலரி மாளிகையில் சந்தித்தபோதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கையளிக்கப்படவுள்ள காணிகளின் திட்டவரைபுகள் படையினரிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இராணுவத்தினரின் புள்ளிவிபரங்களுக்கமைய உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியே 58.73 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் பொதுமக்களிடம் ஒப்படைக்காது இராணுவத்தினர் வசமுள்ளது.

அத்துடன், பொதுமக்களின் சில காணிகளில் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, சில காணிகளில் வேறு சிலரால் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள தாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts