வடக்கில் 65000 வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு நிபுணர் குழுவினர் அனுமதி வழங்கியுள்ளதாக புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த வீடமைப்பு திட்டத்தில் பாதிப்பு கிடையாது என தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வழமையான சீமெந்து கல் வீடுகள் மற்றும் உலோகத்திலான பொருத்து வீடுகள் ஆகியனவற்றுக்கு இடையில் வீட்டின் உள்ளே வெப்பநிலையில் பாரியளவில் மாற்றம் கிடையாது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்யவும் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உலக வீடுகள் துருப்பிடிக்காத் தன்மை கொண்டவை என வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்கும் இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.