முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பேரணி!

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர் நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

mullai-demo-250516

இந்த ஆர்ப்பாட்டம் நேற்று காலை 9.30 அளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டு வலயக்கல்வி அலுவலகம் வரை இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர், வலயக் கல்விப்பணிப்பாளரிடம் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய குறைபாடுகளை எடுத்துக் கூறியதுடன் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

அத்துடன் வடமாகாண முதலமைச்சருக்கான மகஜர் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts