சிறீலங்காவில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைகாரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் யப்பான் விமானமொன்று நேற்று இரவு கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் கடந்த வெள்ளி இரவு 8.45 மணியளவில் குறித்த விமானம் கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்தது.
இதில், மக்களுக்கான உடனடித் தேவைகளான போர்வைகள், தண்ணீர் சுத்திகரிப்பிற்குப் பயன்படுத்தும் மாத்திரைகள், மின்பிறப்பாக்கிகள், தண்ணீர்த் தாங்கிகள் உட்பட பல நிவாரணப் பொருட்கள் யப்பானிலிருந்து வந்த விமானத்தில் கொண்டுவரப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.