அல்வாய் கிழக்கு, வெள்ளுர்ப் பகுதியில் வசித்த இராசநாயகம் அஜந்தன் (வயது 20) என்ற இளைஞன், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் தனது வீட்டில் இருந்தபோது நேற்று புதன்கிழமை (18) மாலை மின்சார தாக்கத்துக்கு இலக்காகியுள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (19) அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொலைக்காட்சிக்கு மின்சார இணைப்பு வழங்கும் போது, இவர் மீது மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.