Ad Widget

பல்கலைக்கழகங்களுக்கு ஒன்லைனில் விண்ணப்பிப்பது கட்டாயம்

அடுத்த வருடம் தொடக்கம் ஒன்லைன் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தபால் மூலம் விண்ணப்பிப்பதனால் ஏற்படும் நேர தாமதத்தை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அறிவகம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிலையங்களினூடாக இலவசமாக விண்ணப்பிக்க முடியும் என்றும் சரியான முறையில் விண்ணப்பித்த விண்ணப்பங்களுக்கான பதில் குறுஞ் செய்திகள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தனது வழிகாட்டல் நூலையும் இலகுபடுத்தி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடியோவூடாக மாணவர்கள் சரியான வழியை அறிந்து கொள்ள முடியும் என்றும் அதனை http://www.ugc.ac.lk தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக ஒன்லைன் பதிவு இந்த வருடம் தொடக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts