பருத்தித்துறை- வவுனியாவுக்கு மேலதிக பஸ் சேவை

பருத்தித்துறையில் இருந்து வவுனியாவுக்கு மேலதிக பஸ்சேவையை வெள்ளிக்கிழமை (13) முதல் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் பருத்தித்துறை டிப்போ முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி, தெரிவித்தார்.

பருத்தித்துறை, மருதங்கேணி, புதுக்காட்டுச் சந்தியூடாக இச்சேவை வெள்ளிக்கிழமை (13) முதல் இடம்பெறவுள்ளது,

வழமையாக பருத்தித்துறையில் இருந்து வவுனியாவுக்கு 6 பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

இச் சேவையில் பருத்தித்துறையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் பஸ் வவுனியாவைச் சென்றடைந்து பிற்பகல் 1 மணிக்கு அங்கிருந்து பருத்தித்துறை நோக்கிப்புறப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts