வவுனியா- பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த பத்து பேர், விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று வந்த கிராம சேவகர்கள் 4 பேர் உள்ளிட்ட 10 பேரே, விடுவிக்கப்பட்டனர்.
இவர்களில் 6 பேர் ஒரு வருட காலமும், 4 கிராம சேவகர்கள் மூன்று மாத காலமும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.