பகிடிவதை தொடர்பில் புதிய பிரகடனம்; குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை

பகிடிவதை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பிலான புதிய பிரகடனம் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பொதுநலவாய பல்கலைக்கழக சங்கம் ஆகியன இணைந்து இந்த பிரகடனத்தை தயாரித்துள்ளன.

களனி பல்கலைக்கழகத்தில் இந்த பிரகடனம் முதலாவதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுனந்த மத்தும பண்டார இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் வெளியேறுதல் மற்றும் விரிவுரையாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் இந்த பிரகடனத்தை செயற்படுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரகடனத்திற்கு அமைய குற்றவாளிகளாக காணப்படும் மாணவர்களுக்கு இரண்டு முதல் ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் ஆராயாமல் அந்த பொறுப்பை பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் துணைவேந்தர் சுனந்த மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts