முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகரவிடம் நேற்று புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
சாவகச்சேரி வெடிபொருள் மற்றும் தற்கொலை அங்கி மீட்பு தொடர்பில் கைதான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தொடர்பில், ருவான் குணசேகர வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், புலனாய்வுப் பிரிவினர் ருவான் குணசேகரவிடம் வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதன் போது, தாம் வெளியிடாத கருத்துக்களை ஊடகங்கள் வெளியிட்டதாக ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்பு தொடர்பிலான ஊடக சந்திப்பினைத் தொடர்ந்து, ருவான் குணசேகர பொலிஸ் ஊடகப் பேச்சாளர்பதவியை இழந்ததுடன், பொலிஸ் ஊடகப் பிரிவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் கலைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.