கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிறுப்பினர்கள் மீண்டும் புனர்வாழ்வு

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராம், நகுலன் மற்றம் தயாளன் ஆகிய விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் கடந்த வாரமளவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த மூவரும், முறையாக புனர்வாழ்வு பெறாத நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மூவரையும், மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பிரபா என்றழைக்கப்படும் கலைநேசன் நேற்று காலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், மேலதிக விசாரணைகளுக்காக, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பு அலுவலகத்துக்குக் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related Posts