விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவின் சிறப்பு தளபதியான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் நேற்று காலை நீர்வேலி தெற்கு பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் காணாமல் போயிருந்த சில தளபதிகளில் இவரும் ஒருவர் என கூறப்பட்டிருந்த நிலையில், நீர்வேலி பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் திருமணம் முடித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு சிவில் உடையில் நீர்வேலி கந்தசாமி கோவிலடி நீர்வேலி தெற்கு என்னும் முகவரியில் அமைந்துள்ள இவரது வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் நகுலன் என்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதியை கைது செய்துள்ளனர். இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.