செம்மணிப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (18) இரவு கும்பலொன்று ஒருவரைத் துரத்தித் துரத்தி வெட்டியதில் அந்நபர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்
கைதடியைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசித்து தற்போது விடுமுறையில் நாட்டுக்கு வந்திருந்த பொன்னம்பலம் நந்தகுமார் (வயது 44) என்பவரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்கானார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.