வடமாகாண சபை உறுப்பினர்கள் மூவர், ஒன்றாக இணைந்து ஒரே தட்டில் உணவு உட்கொண்ட சம்பவம், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது.
மாவை சேனாதிராசாவின் தாயாருடைய அந்தியோட்டிக் கிரியைகள் அன்றைய தினம் மாவையின் வீட்டில் நடைபெற்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
வடமாகாண சபை உறுப்பினர்களாக இமானுல் ஆர்னோல்ட், சந்திரலிங்கம் சுகிர்தன் மற்றும் ஆயுப் அஸ்மின் ஆகியோரே இவ்வாறு உணவு உட்கொண்டனர். இவர்கள் மூவரும் முறையே கிறிஸ்தவம், இந்து மற்றும் இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
அண்மையில் வடமாகாண சபையில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டமைக்கு முக்கியமானவர்களாக இவர்கள் மூவரும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.