பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை!! புதைக்கப்பட்டது!!!

2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப்போரில் வீரச்சாவடைந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை புதைக்கப்பட்டது என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தளபதியாக இருந்தவரும் தற்போதைய அரசாங்கத்தால் இராஜதந்திரியாக நியமிக்கப்பட்டவருமான மேஜர் ஜெனரல் தயாரத்நாயக்கா அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்குகையில் போரில் வீரமரணமடைந்த பொட்டம்மான் மற்றும் பிரபாகரன் ஆகியோரின் உடல்கள் எரிக்கப்பட்டு சாம்பல் கடலில் கரைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக அச்சமயத்தில் போரை வழிநடாத்திய இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிடம் ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியபோது,

பிரபாகரனின் உடல் நந்திக்கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டதெனவும் அது எரிக்கப்படவில்லை புதைக்கப்பட்டது எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

போர் நடைபெற்ற நேரத்தில் ரத்நாயக்கா அப்பிரதேசத்தில் இருக்கவில்லையெனவும் அங்கு என்ன நடந்ததென்பதுபற்றி அவருக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

பிரபாகனின் உடல் புதைக்கப்படவில்லை எரிக்கப்பட்டதென்றே முதலில் இராணுவம் கூறிவந்தது.

முதன்முறையாக இப்போது பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை புதைக்கப்பட்டது என சரத்பொன்சேகா கூறியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts