வாள்வெட்டிற்கு இலக்கான 6 பேர் வைத்தியசாலையில்! மக்கள் அச்சத்தில்!!!!

நீர்வேலி தெற்கில் வீடொன்றுக்குள் புகுந்த இளைஞர் குழுவொன்று மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த தாக்குலினால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 10 பேர் கொண்ட இளைஞர் குழு குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டு உரிமையாளரை பொல் மற்றும் வாள்களால் ஓடஓடத் தாக்கியுள்ளது.

இதனைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் உதவிக்குச் சென்றவேளை தந்தையும் 2 மகன்களும் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பா. தயாளன், எஸ். செல்வராசா, செ.ஜெயக்குமார், செ.சிவகுமார் எஸ். பெரியதம்பி, கே. குகா ஆகியோரே வாள்வெட்டுக்கு இலக்காகி கிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான பா.தயாளன் என்பவருடைய வீட்டிலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக இந்த இளைஞர் குழுவின் அட்டகாசம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கும் விழிப்புக் குழுவில் இவர்கள் செயற்பட்ட காரணத்துக்காவே தாக்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts