சாவகச்சேரி – மறவன்புலோ பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டது அரசாங்கம், அரசாங்கத்தின் கீழ் உள்ளவர்களின் சதி திட்டம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தந்தை செல்வாவின் 118வது பிறந்த தினமான இன்று வியாழக்கிழமை தந்தை செல்வா சதுக்கத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அங்கு மீட்கப்பட்ட பொருட்கள் சிங்கள பத்திரிகையினால் பொதி செய்யப்பட்டுள்ளது. இதை தமிழ் மக்கள் மீது சுமத்தி, விடுதலைப் புலிகள் மீண்டெழுகின்றார்கள் என குற்றம்சாட்டி, தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கான நாடகம் என்றார்.
