கைதானவரின் இரண்டாவது மனைவியே தகவல் அளித்தாராம்!

சாவகச்சேரி, மறவன்புலவில் மீட்கப்பட்ட தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும் வெடிபொருள்கள் குறித்த தகவலை கைதானவரின் இரண்டாவது மனைவியே வழங்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று மேற்படி விடயத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது.

மறவன்புலவில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தேடுதலில் வெடிபொருள்கள் சிக்கின. சந்தேகநபரை வன்னேரிக்குளத்தில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

கைதான ரமேஸ் எனப்படும் எட்வேர்ட் ஜூலியன் (வயது 32) என்றும்,13 வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ரமேசின் இரண்டாவது மனைவியே, வெடிபொருட்கள் பற்றிய தகவலை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் ரமேஸ் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிபொருட்களை சில நாட்களுக்கு முன்னரே, மன்னாரில் இருந்து ரமேஸ் அந்த வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளார். அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே, அவரது இரண்டாவது மனைவி இது பற்றிய தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.

ரமேஸ் முன்னர், மன்னாரில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவர் என்றும் கூறப்படுகிறது என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts