யாழ். பல்கலை பழைய மாணவர்கள் ஊடக அமைச்சரிடம் மகஜர்

யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தை மீள ஆரம்பிக்க வேண்டும், யாழ். பல்கலைகழகம் வெளிவாரி ஊடக பட்டப்படிப்பினை மேற்கொள்ள ஆவண செய்ய வேண்டும், போன்ற ஆறு அம்ச கோரிக்கையை முன்வைத்து ஊடக அமைச்சரிடம் யாழ். பல்கலைகழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் பழைய மாணவர்கள் மகஜர் ஒன்றினை கையளித்து உள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயமாக கடந்த சனிக்கிழமை வருகை தந்த வெகுஜன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலகவிடமே இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.

மகஜரை பெற்றுக்கொண்ட அமைச்சர் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Related Posts