பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள விடுமுறை விடுதி இன்று(25) திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ் அல்லைப்பிட்டி குறிகட்டுவன் வீதியில் அமைக்கப்பட்டுள்ள 25 அறைகளுடன் சகல வசதிகளையும் உள்ளடக்கிய இக்கட்டடத்தை பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உத்தியோகபூர்வமாக இன்று(25) திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிகழ்வில் பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் பிரதி அமைச்சர் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, எதிர் கட்சித்தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.