இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜாவின் தாயார் சோமசுந்தரம் தையல் பிள்ளை அவர்கள் 2016.03.18ம் திகதி அதிகாலை மூன்று மணியளவில் தனது 97வது வயதில் காலமானார்.
இவர் 1919.07.15ம் திகதி மாவிட்டபுரத்தைச்சேர்ந்த காசிப்பிள்ளை எள்ளுப்பிள்ளை தம்பதிகளின் நான்காவது மகளாக பிறந்து அதே மண்ணைச்சேர்ந்த சோமசுந்தரம் அவர்களை கரம்பிடித்து ஏழு பிள்ளைகளின் தாயாக இல்லற வாழ்வை இனிதே நடத்தினார்.
தமிழர்களின் விடுதலை வரலாற்றில் பல்வேறு விடுதலை அமைப்பைச்சேர்ந்த போராளிகளுக்கு தன் கையால் உணவூட்டிய பெருமைக்குரியவர்.
இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் வகிபாகத்தை எடுத்திருக்கும் மாவை சேனாதிராஜா அவர்களை இந்த மண்ணுக்கு தந்த பெருமைக்குரியவர் ஆவர்.
