வடமாகாண மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

நீதியும் சட்டமும் என்ற கோட்பாட்டில் இலங்கை, இந்தியா ஆகிய இருநாடுகளும் மீனவர்களுக்கான தீர்வினை பெற்றுகொடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொள்வது தொடர்பாக வடமாகாண மீனவ சம்மேளனத் தலைவர்கள், கிராம அமைப்புகள், மீனவ சங்க பிரதிநிதிகளுடான சந்திப்பு ஒன்று நேற்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே விடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே,

உங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டும் என நாம் நம்புகின்றேன். எனினிம் சில பிரச்சினைகள் எனது அதிகாரத்துக்கு அப்பால் காணப்படுகின்றது.

இது இருநாட்டு பிரச்சனைகளாக காணப்படுகின்றன. இன்றைய காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு நன்றாக அமைந்துள்ளது.

மேலும் நான் ஆளுநராக உங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய பதிலை கூறவேண்டிய நிலையிலும் இருக்கின்றேன். எனவே எதிர்காலத்தில் உங்களுடைய பிரச்சினைகளுக்கு மிகவிரைவில் தீர்வு கிடைக்க சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்று வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

Related Posts