விபத்தில் இளைஞர் படுகாயம்!

லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்ததுடன், மாடு ஒன்றும் உடல் சிதறி உயிரிழந்துள்ளது.

யாழ். பளை புதுக்காட்டுச் சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில், பளைப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கால் முறிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணல் ஏற்றிக்கொண்டு, இயக்கச்சி வீதி பகுதியில் இருந்து பளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி வீதியில் நின்ற மாடு ஒன்றை மோதிக்கொண்டு பளை புதுக்காட்டு பகுதியில் பளையில் இருந்து இயக்கச்சி பக்கமாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் மாடு லொறியின் சில்லுக்குள் அகப்பட்டு, மாடு உடல் சிதறி உயிரிழந்ததுடன், சில்லுக்குள் சிக்குண்டிருந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை இழுத்தெடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் குறித்து பளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related Posts