சில்லறை வணிகர்களால் சிகரட் உள்ளிட்ட புகையிலைபொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்வது குறித்து புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபான தொடர்பான தேசிய அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது.
அதன் தலைவர் வைத்தியர் பாலித்த அபேகோன் இதனைத் தெரிவித்துள்ளார் இது தொடர்பான காரணிகளை தற்போது ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிகரட் பெட்டிகளில் 80 சதவீதமான பகுதியில் நோய் பாதிப்பு குறித்து விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் அமுலாக்கப்பட்டது.
எனினும், சிகரட் உள்ளிட்டவற்றை, சில்லறைக்கு விற்பனை செய்வதை தடுப்பதன் ஊடாக, மேலும் சிகரட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் பாவனையை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.