யாழ்.பொதுநூலகத்தில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் உருவச் சிலையினை நிறுவவுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜா தெரிவித்தார்.
யாழ்.கீறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களுக்கான விருந்துபசார நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அவரின் நினைவாக பாதி உருவச்சிலையினை நிறுவவுள்ளதாக தெரிவித்தார்.
யாழ். பொதுநூலகத்தில் இந்தியன் கோர்னர் என்ற புத்தக நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டு இந்திய புத்தகங்கள் 10 ஆயிரம் வைக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தக நிலையத்தினை வெறும் காட்சியமாக பார்க்காமல் இதில் உள்ள புத்தகங்களை பொதுமக்கள் பாவித்துப் பயன்பெறுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் செய்துகொண்டிருக்கும் சிலை மிக விரைவில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்து யாழ்.பொது நூலகத்தில் உள்ள இந்திய கோர்னரில் நிறுவவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.