வல்வட்டித்துறையில் இரண்டு கிலோவிற்கும் அதிகமான ஹெரோய்ன் கண்டுபிடிப்பு

வல்வட்டித்துறை பிரதேசத்தில் இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்படி ஹெரோய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வல்வட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொண்டமானாறு அக்கறை கடற்கரை பகுதியில் வைத்து இன்று காலை 8.30 மணியளவில் இவை மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேலும் ஹெரோய்ன் போதைப் பொருள் இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதனால் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Posts