தமிழ் மாணவர்கள் மீது சிங்களவர் தாக்குதல்!

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சித்த மருத்துவபீட தமிழ் மாணவர்கள் 9 பேர் நேற்றிரவு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் கடும் காயங்களுடன் நிலாவெளி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

50 இற்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்கள் மருத்துவபீடத்தினுள் நுழைந்து தம்மைத் தாக்கினர் என்று தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், கல்முனையைச் சேர்ந்த ஒரு மாணவனும், அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு மாணவனும், நீலாவணையைச் சேர்ந்த ஒரு மாணவனும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு மாணவனும், நாவலப்பிட்டியவைச் சேர்ந்த ஒரு மாணவனுமே தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தங்களுக்கிடையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பகை முற்றியதன் காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றது என்று காயமடைந்த மாணவர் ஒருவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் நிலாவெளிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts