உயர்பாதுகாப்பு வலயங்கள் இல்லை: பாதுகாப்பு அமைச்சு

‘வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் உள்ள முப்படைகளினதும் முகாம்களை 2016ஆம் ஆண்டில் அகற்றுவது தொடர்பில் சரியான பதிலொன்றை வழங்க முடியாது’ என்று பாதுகாப்பு அமைச்சு, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (09) அறிவித்தது.

நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ‘வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள முகாம்களை இவ்வாண்டில் அகற்றுவது தொடர்பில் முடிவேதும் இருக்கின்றதா?’ என ஜயந்த சமரவீர எம்.பி, பாதுகாப்பு அமைச்சிடம் கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கான பதில் சபைக்கு ஆற்றப்பட்டது.

‘நாட்டின், வலையத்தின் சர்வதேசத்தின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் எடுத்தே „முகாம்கள்… நிறுவப்படும். இதற்கு புலனாய்வு துறையின் அறிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும’; என்றார்.

‘இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பேணிவரப்படுகின்ற இராணுவ முகாம்களைச் சார்ந்ததாக உயர் பாதுகாப்பு வலயங்கள் எதுவும் இல்லை என்றும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts