யாழ் மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் பரிசோதனை

யாழ் மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களின் தரம் பரீட்சிக்கும் நிகழ்வு மாநகர சபை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

auto-checking-bus-school-1

இதன் போது இச்சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், வேன்கள், பஸ் வண்டிகள் மோட்டார் திணைக்கள அதிகாரிகளினால் பரிசோதனை செய்யப்பட்டன.

இப்பரிசோதனையின் போது யாழ் போக்குவரத்து பொலிசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன் பரிசோதனை செய்யப்பட்ட வாகனங்கள் உரிய தரம் இருப்பின் அதற்கான ஸ்ரிக்கர் ஒன்று ஒட்டப்படும் என வாகனங்களை பரிசோதனை செய்யும் அதிகாரி குறிப்பிட்டார்.

இவ்வாகன பரிசோதனை யாழ் மாவட்ட ஏனைய வடமராட்சி, தென்மராட்சி உள்ளிட்ட இடங்களிலும் எதிர்வரும் காலங்களில் ஏற்பாடு செய்யப்படிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts