மகளிர் தினத்தன்று மன்னாரில் நிகழ்ந்த கொடுமை!!

மன்னார் பெரியகரிசல் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும், பெரிய கரிசல் கிராமத்தில் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் தெரியவருகிறது.

சந்தேகநபரின் மனைவி வீட்டில் இல்லாத நிலையில், இந்த துஷ்பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மன்னார் பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக்கோரி மன்னார் மாவட்டத்தில் நேற்ற கறுப்புப்பட்டி போராட்டம் இடம்பெற்ற நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts