சேர்.பொன் இராமநாதன் வீதியை நாச்சிமார் கோவில் வீதி என மாற்றுவதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபை அனுமதி வழங்கியதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கே.கே.எஸ். வீதியையும் பலாலி வீதியையும் இணைக்கும், இவ்வீதியானது, சேர்.பொன் இராமநாதன் வீதி என்ற அழைக்கப்படுகின்றது.
இந்நிலையில், அண்மையில் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று வீதிகளுக்கான பெயர்ப் பலகைகளை நாட்டியுள்ளது. அதில் சேர்.பொன் இராமநாதன் வீதி என்பதற்கு பதிலாக ‘நாச்சிமார் கோவில் வீதி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பெயர்ப் பலகைக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை அனுமதி வழங்கி, தமது இலட்சினையும் அதில் பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.