இலங்கையர்களை பாதுகாப்பு காவலர் பதவிகளில் இணைத்துக்கொள்ள மலேசியா அரசு தீர்மானித்துள்ளது.
மலேசியாவில், இதுவரை காலமும் பாதுகாப்பு காவலர் பதவிகளில் நேபாள நாட்டவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், இலங்கையர்களையும் இவ்வாறு பாதுகாப்பு காவலர் பதவிகளில் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மலேசியாவின் பிரதி உள்துறை அமைச்சர் டட்டுக் நூர் ஜஸ்லான் மொஹமட் கூறியுள்ளார்.
நேபாளத்திலிருந்து இந்தப் பணிகளுக்கு வருவோரின் தொகை மிகவும் குறைவாக இருப்பதனால் வேறு நாட்டவர்களையும் இந்தப் பதவிகளில் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விஷேடமாக இலங்கை போன்ற இராணுவ பின்புலமுடைய நாடுகளிலிருந்து பாதுகாப்பு காவலர்களை பெற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.