தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த மாநாடு நேற்று 27-02-2016 சனிக்கிழமை யாழ் நல்லூர் சட்டநாதர் சிவன்கோவில் வீதியில் அமைந்துள்ள இளம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
காலை 10.00 மணிக்கு ஆரம்பமான மேற்படி நிகழ்வு துசாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. முதலாவது நிகழ்வாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சிக் கொடியினை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் கொடியினை இ.எ.ஆனந்தராஜா அவர்களும் ஏற்றிவைத்தனர்.
தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தவர்களுக்கான ஈகச் சுடரினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது மகனுமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
வரவேற்புரையினை நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய துசாந்தன் அவர்கள் நிகழ்த்தினார்.
வரவேற்புரையினைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான புதிய மத்திய செயற்குழுவும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கான புதிய செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தலைவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) செல்வராசா கஜேந்திரன்(பொதுச் செயலாளர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்( தேசிய அமைப்பாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) திருமதி பத்மினி சிதம்பரநாதன், பெண்கள் விவகார தலைவி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) திருமதி சிவரதி ராஜ்குமார் (வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி), பிரபல சட்டத்தரணி வி.திருக்குமரன், இராமநாதன் ஸ்ரீஞானேஸ்வரன் (திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்), கட்சியின் முக்கிய உறுப்பினரும், வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவருமான எஸ்.என.ஜி.நாதன் ஐயா, வவுனியா மாவட்டம், சின்னமணி கோகிலவாணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுந்தரமூர்த்தி செந்தூரன், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர், சிவகுரு இளங்கோ, உபதலைவர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், நாகமுத்து பன்னீர்செல்வம்(மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக செயலாளர்)ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தினர்.
கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் இன்னாசிமுத்து சத்தியசீலன் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6வது வருடாந்த மாநாட்டுத் தீர்மானங்களை பார்வையிடுவதற்கு இங்கு அழுத்தவும்


















