வடக்கின் ஆளுநராக முன்னாள் மேல்மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் நிர்வாக திறன் அறிந்தவர் என்பது தெரியும் ஆனாலும் தமிழர்கள் ஆட்சி செய்யும் ஒரு மாகாணத்துக்கு தமிழரோ அல்லது முஸ்லிமோ தான் ஆளுநராக வரவேண்டும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தொடர்ந்து சிங்களவர் ஒருவர் எதிர்ப்பை மீறி நியமிக்கப்பட்டால் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் இது ரெஜினோல்ட் குரேக்கு எதிரானது அல்ல இது கொள்கை அடிப்படையானது. தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.