இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது சிவில் சமூக அமைப்புகளுடான சந்திப்பிலும், அரச அதிகாரிகளுடான சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டார்.
நாட்டின் அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களை பார்வையிடும் நோக்கில் வெளிவிவகார அமைச்சரின் யாழ் விஜயம் அமைந்திருந்தது.
