சம்பந்தனுக்கு உதவிய பிரேமதாசவின் பாரியார்!

கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், ஆசனத்தில் இருந்து எழுந்திருக்க, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாச உதவியுள்ளார்.

sambanthan-mrs-peramadasha

68வது தேசிய சுதந்திர தினத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு வந்த போது, அதில் கலந்து கொண்டவர்கள், ஜனாதிபதியை வரவேற்பதற்காக எழுந்து நின்றனர்.

இதன் போது, எதிர்க்கட்சித் தலைவர் தனது ஆசனத்தில் இருந்து எழுந்திருக்க சற்று சிரமப்பட்டுள்ளார்.

Related Posts