தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது பெரிய விடயமல்ல!- சம்பந்தன்

சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை பெரிய விடயமல்ல என்று தெரிவித்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்.

sampanthan-indip-day

இது புதியதுமல்ல, அதேவேளை ஆச்சரியப்பட வேண்டியதொன்றுமல்ல. ஏனெனில் தேசிய கீதம் ஏற்கனவே சுதந்திர தினத்தில் தமிழில் பாடப்பட்டு வந்த ஒன்றே.

இது பெரிதான விடயமல்ல. இதனை மீள நடைமுறைப்படுத்தியதில் அரசாங்கத்திற்கும் நன்மையாகும். அதே போன்று மக்களுக்கும் நல்லதுதான். மீண்டும் அதனைத் தொடக்கியிருந்தது மகிழ்ச்சிதான்.

எனினும் தமிழ் மக்கள் பிறர் தயவில் வாழ வேணடியவர்களல்லர். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts