மலக்கழிவுகளால் நாறும் கீரிமலை

கீரிமலைப் பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையினர் மலக்கழிவுகளைக் கொட்டி வருவதால் அப்பகுதியிலுள்ள நிலத்தடி நீர் மாசடைவதுடன், அப்பகுதியில் மீளக்குடியேறிய மக்கள் சுகாதாரச் சீர்கேடான காற்றை சுவாசிக்க வேண்டியுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார் தெரிவித்தார்.

தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, கருத்துத் தெரிவித்த தெல்லிப்பழை பிரதேச செயலர் கே.ஸ்ரீமோகனன்,

கீரிமலையில் முன்னர் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையினர் குப்பைகளைக் கொட்;டி வந்தனர். நாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்கள் குப்பை கொட்டுவதை நிறுத்திவிட்டார்கள் என்றார்.

இதன்போது, கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,

இது தொடர்பில் உத்தியோகபூர்வமான கடிதம் ஒன்றை எழுதி, உரிய இராணுவ அதிகாரிக்கு கையளித்தால் அவர்கள் அவ்விடத்தில் மலக்கழிவுகளை கொட்டுவதை நிறுத்துவார்கள் என்றார்.

Related Posts