மக்கள் ஆணைக்கு மாறான கருத்துக்கள் வந்தால் ஏற்கமாட்டோம்! – எம்.ஏ.சுமந்திரன்

நாட்டில் இருக்கும் பிற்போக்கு சக்திகளுக்கு இடம்கொடுத்து அரசாங்கம் நல்லதொரு செயல்முறைக்கு முன்வைத்த காலை பின்வைக்கக் கூடாது, அதனை முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என, வலியுறுத்துவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“அரசியல் தீர்வு சம்பந்தமான எங்களது நிலைப்பாட்டை 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது நாங்கள் முன்வைக்கையில், மக்கள் இதனை சர்வஜன வாக்கெடுப்பாக கருதி ஆணையை கொடுக்க வேண்டும் என்றோம், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த ஆணையை மிக பெரும்பான்மை வாக்குகளால் அளித்துள்ளனர்.

அவர்களின் இந்த அரசியல் அபிலாசைகளை தட்டிக் கழிக்க முடியாது, அதற்கு செவிசாய்த்து உரிய கௌரவத்தை ஜனநாயக ரீதியாக வழங்க வேண்டும், ஒரு நாட்டுக்குள்ளே நாங்களும் அரச அதிகாரத்தை கையாளும் விதமாக அதிகாரங்களை பகிருங்கள் என்றே கூறுகின்றர். நாட்டில் மற்றைய பகுதியிலுள்ளவர்கள் இதற்கு செவிசாய்க்க வேண்டும்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts