யுவதியை கூட்டிச் சென்றவருக்கு விளக்கமறியல்

யுவதியொருவரைக் கூட்டிச் சென்று பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த இளைஞரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (06) உத்தரவிட்டார்.

வரணி, இயற்றாலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய யுவதியொருவரை காதலித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 1ஆம் திகதி யுவதியை அழைத்துச் சென்ற குறித்த இளைஞன், இரண்டு நாட்களாக யுவதியை பற்றைக்குள் மறைத்து வைத்துள்ளார்.

இதையடுத்து, யுவதியின் உறவினர்கள் தேடி வந்தபோது, அவரை கைவிட்டுவிட்டு இளைஞன் தலைமறைவாகிள்ளார்.

இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்தனர்.

யுவதியை திருமணம் செய்வதற்கு தனது பெற்றோர் மறுப்புத் தெரிவித்தமையினாலேயே அவரை கூட்டிச் சென்றதாக விசாரணைகளின்போது குறித்த இளைஞன் தெரிவித்தார்.

Related Posts